ஆற்காட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஆற்காட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
X
ஆற்காட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இராதாகிருஷ்ணன் தெருவைச்சேர்ந்த ராஜேஷ்(25), இவர் வீட்டிலேயே கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஆற்காடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீஸார், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள ராஜேஷ், வீட்டிற்குச் சென்று அவரது வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையின் போது மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து ராஜேஷைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!