ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
X

பைல் படம்.

ஆற்காட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை கைது செய்த போலீஸார் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேல்முருகேசன் தெரு பின்புறமாக உள்ள வீடுகளுக்கிடையே மறைவாக வாலிபர் ஒருவர் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஆற்காடு டவுன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் அங்கு சென்று கண்காணித்து வந்த போலீஸார் கஞ்சாவிற்று வந்த சதீஷ் (24) என்ற வாலிபரைக் கைது செய்தனர்.

மேலும் , அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 100கிராம் ,கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

பின்பு இதுகுறித்துப் போலீஸார் வழக்குப்பதித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!