கணவன், மனைவி சண்டையில் இருவரும் கிணற்றில் குதித்தனர்: கணவன் உயிரிழப்பு

கணவன்,  மனைவி சண்டையில் இருவரும்  கிணற்றில் குதித்தனர்: கணவன் உயிரிழப்பு
X

கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன்

கலவையடுத்த கிளாத்தாங்கலில் கணவன், மனைவி சண்டை முற்றி, இருவரும் தற்கொலைக்கு கிணற்றில் குதித்ததில் கணவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கிளாதாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (42) தனியார் கல்லூரியில் டிரைவராக இருந்தார். அவருக்கு கவிதா (32) என்ற மனைவி, திலிப் (14) மகனும், தர்ஷினி (12) மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தொடர்ந்து மது குடித்து விட்டு போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் வழக்கம்போல குடித்து விட்டு கவிதாவிடம் சண்டையிட்டுள்ளார் .

அதில் கணவன் மனைவியிடையே சண்டை முற்றியதன் விளைவாக தற்கொலை முடிவில் இருவரும் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்தனர். அதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.அதில்,கவிதாவை காப்பாற்றினர்

பின்பு வெங்கடேசனை கண்டுபிடிக்க நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் கலவை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர் .தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பாதாள கொலுசு மூலம் தேடியதில் வெங்கடேசன் சடலமாக மீட்கப்பட்டார் .

இதுகுறித்து, கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!