/* */

போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ6 லட்சம் சுருட்டிய வருமானவரி அதிகாரி உட்பட 6 பேர் கைது

ஆற்காட்டில் தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ6 லட்சம் சுருட்டிய வழக்கில் வருமானஅதிகாரி உட்பட 6 பேர் கைது

HIGHLIGHTS

போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ6 லட்சம் சுருட்டிய வருமானவரி அதிகாரி உட்பட 6 பேர் கைது
X

போலி வருமானவரி சோதனை நடத்தி ஆறு லட்சம் சுருட்டியவர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்த தொழிலதிபர் ஆட்டோ கண்ணன். அவர் கல்லூரி ஒன்றின் பங்குதாரராகவும் பைனான்ஸ் அதிபராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ,கடந்த மாதம் 30ந்தேதிஅவரது வீட்டிற்கு வருமானவரிஅதிகாரிகள் என்று கூறி 6பேர் கொண்ட கும்பல் சுமார் 2மணிநேரம் சோதனை செய்வது போல நாடகமாடினர். அதில்,தவறுகள் உள்ளதாகவும் அவற்றை சரிசெய்ய ரூ6லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி கண்ணன் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார் . பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து ஒரு வாரத்தில் தகவல் வரும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர் .

இந்நிலையில் ,தகவல் எதுவும் வராத நிலையில் சந்தேகமடைந்த அவர் வேலூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இது குறித்து விசாரித்தார். அதிகாரிகள் துறைசார்பில் சோதனை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

எனவே சோதனை போலியானது என்பதை அறிந்த கண்ணன், நடந்த சம்பவம் குறித்து இராணிப்பேட்டை எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், ஆற்காடு டவுன் போலீஸார்வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அதில்,கண்ணன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலிநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதில் கண்ணனின் விற்பனை வளாகத்தில் குடியிருந்த ஆற்காட்டைச் சேர்ந்த எழிலரசு, அவரது நண்பர் பரத், மற்றும் சென்னை வருமானவரி முதுநிலை கணக்கு அதிகாரி மற்றும் சென்னை பெரம்பூர் ஜமாலியாவைச்சேர்ந்த முபீனா உள்ளிட்டவர்களை சோதனை நடத்தி ரூ6லட்சம் சுருட்டிய வழக்கில் ஆற்காடு டவுன் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 9 Aug 2021 2:25 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...