aஅரக்கோணம் அருகே கோவில் திருவிழா விபத்து: மூவர் உயிரிழப்பு

aஅரக்கோணம் அருகே கோவில் திருவிழா விபத்து: மூவர் உயிரிழப்பு
X

திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் விபத்து

நெமிலி அருகே திரவுபதி அம்மன் கோயிலில் கிரேனில் தொங்கி மாலை சாமிக்கு அணிவித்த போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கி வந்தவாறு சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து (42 ) என்பவரும் உயிர் இழந்தார் . அது மட்டுமின்றி ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்த கீழ்ஆவதம் பூபாலன் என்பவரும் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக நெமிலி வட்டாட்சியர் சுமதி , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
future of ai act