அரக்கோணத்தில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

அரக்கோணத்தில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
X

பைல் படம்.

அரக்கோணத்தில் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர்கள் செயினை பறிக்க முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஜவஹர்நகர் பகுதியைச்சேர்ந்த ராணுவ்வீரர் சுப்பிரமணி, அவர் மனைவி,லட்சுமி (55),இரவு வீட்டிற்கு வெளியே தெருவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 வாலிபர்கள் லட்சுமிகழுத்தில் அணிந்துள்ள 9பவுன் செயினைப் பறிக்கமுயற்சித்தனர்.

அதற்குள், சுதாரித்து லட்சுமி செயினைப் பிடித்துக்கொண்டே கூச்சலிட்டார். அதனைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவர்களைப் பிடிக்க ஓடிவந்தனர். அதைக்கண்ட மர்ம நபர்கள், வேகமாக பைக்கை ஓட்டி அங்கிருந்து தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீஸார்சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி புட்டேஜ்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!