அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் கடற்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கடலில் மிதந்து வந்ததாக அப்பகுதி மீனவர்கள் காணொளி எடுத்து அதை பதிவு செய்துள்ளனர். மேலும் அது ஆண் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக கடலோர காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 1 வாரத்திற்கு முன்பு மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற கார்மேகம் என்கின்ற மீனவர் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். அவரது உடல் கிடைக்காத காரணத்தால் அவரது உறவினர்களுக்கு மண்டபம் கடலோர காவல்துறையினர் தகவல் தெரிவித்து கோட்டை பட்டினத்திற்கு அழைத்து வந்தனர்.மீனவர்கள் இது குறித்து கூறும்போது இறந்த மீனவர் உடல் மிகவும் மோசமான நிலையில் அழுகிய நிலையில் காணப்படுவதால் கடலில் ஐந்து நாட்களுக்கு மேல் மிதந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!