/* */

இராமநாதபுரம்: குடும்ப பிரச்சனையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, குடும்ப பிரச்சனையில் தாய், மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம்: குடும்ப பிரச்சனையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
X

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள காட்டுப் பகுதியில், பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கண்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அருகில் மற்றொரு ஆண் கிடப்பதைக் கண்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை தொண்டி அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர், மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, வையூர் கிழக்கு தெருவை சேர்ந்த சின்ன முனியாண்டியின் மனைவி மாரியம்மா (60) என்பதும், சிகிச்சை பெற்று வந்தவர் அவரது மகன் பாக்கியராஜ் (40) என்பதும் தெரிய வந்தது.

பாக்கியராஜின் தம்பி மனைவி, தன் மீது தவறான பழி சுமத்தியுள்ளார். இதனால், அவமானப்பட்ட மாரியம்மாவும் அவரது மகன் பாக்கியராஜும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தொண்டியில் உள்ள காட்டுப் பகுதியில், கடிதம் எழுதி வைத்து விஷம் குடித்துள்ளனர். இதில் மாரியம்மா இறந்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரின் உடல்களை உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்