/* */

திருவாடானை அருகே நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து தங்க நகைகள் திருட்டு

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடுபோனது

HIGHLIGHTS

திருவாடானை அருகே நகை  பட்டறையின் மேற்கூரையை  பிரித்து தங்க நகைகள் திருட்டு
X

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து வெள்ளி மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

திருவாடானை அருகே நகை பட்டறையின் ஓட்டை பிரித்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் கொள்ளை.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் செல்வம் (50) எஸ்.பி.பட்டிணத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வரும் இவர் சொந்தமாக அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை தனது நகை பட்டறையை பூட்டிவிட்டு வங்கிக்குச் சென்றுள்ளார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் நகை பட்டறை ஓட்டை பிரித்து உள்ளே இருந்த ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மதியம் வங்கியில் இருந்து பட்டறைக்கு திரும்பிய செல்வம் கடையை திறந்து பார்த்தபோது மேலே ஓடு பிரிக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி.பட்டிணம் போலீஸார் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு