மராமத்து பணிக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர்: வைரலாகும் வீடியாேவால் பரபரப்பு

மராமத்து பணிக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர்: வைரலாகும் வீடியாேவால் பரபரப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் ஆண்டாவூரணி ஊராட்சியில் ஊரணி மராமத்து வேலை பார்த்ததற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர். வைரலாகி வரும் வீடியோ.

ஊரணி மராமத்து வேலை பார்த்ததற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர். வைரலாகி வரும் வீடியோ. ஊராட்சி செயலாளர் இந்திரா சஸ்பெண்ட்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் ஆண்டாவூரணி ஊராட்சியில் ஊரணி மராமத்து வேலை பார்த்ததற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர். வைரலாகி வரும் வீடியோ.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் ஆண்டாவூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பனிச்சகுடி கிராமத்தில் சுமார் ஒரு லட்சம் செலவில் அதே ஊரைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் சரவணன் மூலம் ஊரணி மராமத்து பணிகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு நடை பெற்றதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்கனவே பல்வேறு தொகை வழங்கப்பட்ட நிலையில் இறுதியாக 34 ஆயிரம் ரூபாய் நிலுவைத் தொகை இருந்துள்ளது. அந்த நிலுவைத் தொகையை ஆண்டாவூரனி ஊராட்சி மன்ற செயலாளர் இந்திரா வங்கியில் இருந்து எடுத்து வந்து ஆண்டாவூரணி அலுவலகத்தில் வைத்து கொடுக்கிறார்.

அப்போது நடக்கும் உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்மந்தப்பட்ட வீடியோவில், வேலை பார்க்காத ஊரணி என்று கூறும் போது வேலை பார்த்த ஊருணி என சரவணன் என்பவர் செல்கிறார். ஊராட்சி செயலாளர் தலைவருக்கு 5000 எனக்கு 1000. மேனேஜருக்கு 2000 ஓவர்சீயருக்கு 1000 இல்லை என்றால் அங்கு போய் நிற்க முடியாது என்று கூறுகிறார்.

எல்லாம் சேர்த்து மொத்தம் ஒன்பது ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையை செயலாளர் கொடுக்கிறார். பின் செயலாளர் வயிசுக்கு கொடுங்கள் என்று கூற அவர் வாங்க மாட்டார் என பணத்தை வாங்கி கொண்டு வெளியேறும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒப்பந்தகாரர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டாவூரணி ஊராட்சி செயலாளர் இந்திரா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself