மாயமான மீனவர் உடலை தோண்டி எடுத்து விசாரணை

மாயமான மீனவர் உடலை தோண்டி எடுத்து விசாரணை
X
முள்ளிமுனை கிராமத்தில் மீனவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக மீனவர் கொலை. உடலை தோண்டி எடுத்து விசாரணை.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை கிராமத்தில் பல நாட்களாக இருதரப்பினர் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. சேது வகையறா தரப்பினர் ஜெயக்குமார் என்பவர் முனியய்யா சோவிலுக்கு சாமி கும்பிட சென்ற இடத்தில் கொலையும் நடந்துள்ளது. அதன் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பால்கண்ணன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் எதிர்தரப்பை சேர்ந்த இவரது நண்பர்கள் வீட்டில் இருந்து கூட்டிச் சென்ற முதல் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அவரது தந்தை பால்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் தொண்டி காவல் நிலையத்தில் மீனவர் மாயம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல் துறையினரிடம் சந்தேகத்தின் பேரில கூறிய ஒபர்களை சரிவர விசாரணை செய்யாமல் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், பால்கண்ணன் தந்தை பால்செல்வம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆட்கொனர்வு மனு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்தார். கடந்த வாரம் விசாரணைக்கு வந்த நிலையில் தொண்டி காவல்துறை சார்பில் ஆஜரான போது தேடுவதாக தெரிவித்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து வாய்தா போடப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அதிரடி நடவடிக்கை எடுத்து தனி பிரிவு நியமித்து உத்தரவின் பிறப்பித்தார்.
அதன் பேரில் விசாரணை செய்ததில் முதலில் பால்கண்ணன் கொலை செய்யப்பட்டதும், உடலை கானாட்டாங்குடி கண்மாய் அருகே புதைக்கப்பட்டதும் தெரியவந்து. இன்று புதைக்கப்பட்ட இடத்தில் பால்கண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சிதைந்த உடலை அங்கேயே உடற்கூறாய்வு செய்து, பின் பாகங்களை மரபணு சோதனைக்கு எடுத்து அனுப்பி வைத்தனர். முதல் விசாரனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த வழக்கில் இறந்தவரின் வாகனம், அவர் அணிந்திருந்த நகை மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்படவில்லை எனவும், குற்றவாளிகளை தேடி வருவதாகவும் எஸ்பி.கார்த்திக் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!