மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு

மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு
X

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி, முடிச்சான் சவுக்கு தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தொண்டி விஏஓ.,ராஜேஸ் மற்றும் அலுவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மாட்டு வண்டியில் இருந்த மணல் மூட்டைகளை பிக்கப் வாகனத்தில் மாற்றிக் கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக திருவாடானை மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்து தப்பியோடிய வெள்ளையபுரம் மண்டலக் கோட்டையைச் சேர்ந்த ஆண்ட்ரோஸ் மகன் அன்பு, நம்புதாளை கிழக்கு தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் பாண்டி ஆகியோர் மீது தொண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!