அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்.
New PHC Construction Boomi Pooja
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றிய யூனியன் வேதாளை ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் ராமநாதபுரம் திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் வேதாளை ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது அல்லா பிச்சை மற்றும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் அல்ஹாஜ் எம்.எஸ். லுத்துபுல்லாஹ் ஆலிம் தலைவர் வடக்கு தெரு ஐக்கிய ஜமாத் வேதாளை அனைத்து ஜமாத்தார்களும் அனைவரும் கலந்து கொண்டனர்.
மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் குஞ்சார் வலசை முன்னாள் ஊர் தலைவர் ஜெயக்குமார், கலந்து கொண்டனர் . இதில், ஆறாவது வார்டு மன்ற உறுப்பினர் எஸ் ரூபைதா பேகம் மற்றும் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள் டாக்டர் அர்ஜுன் குமார் துணை இயக்குனர் சுகாதார பணிகள். மற்றும் டாக்டர் சுரேந்திரன் வட்டார மருத்துவ அலுவலர். மற்றும் டாக்டர் அனு சௌபா மருத்துவ அலுவலர். மற்றும் மகேந்திரன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் இதில், பொதுப்பணித்துறை அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu