பாம்பனில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம். பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. அந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாற்காக ஏற்றப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu