முதுகுளத்தூர் அருகே குடும்ப தகராறில் பெண் வெட்டி கொலை: சகோதரர்கள் கைது
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தோப்படைப்பட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மனைவி அழகேஸ்வரி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். அழகேஸ்வரி தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முனியசாமி(35) என்பவருக்கும் அழகேஸ்வரிக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அழகேஸ்வரியை பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். மேலும் நிலத்தை ஒத்தி வைத்து திருப்பியது தொடர்பாகவும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அழகேஸ்வரியை அவரது உடன்பிறந்த சகோதரர்கள் வினோத்குமார்(20), அரசகுமார்(23) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அழகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நேற்று அழகேஸ்வரியை கொலை செய்த பின் அவரது தந்தை ஆதி (55) என்பவர் பேரையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பேரையூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அழகேஸ்வரியை கொலை செய்தது அவரது தந்தை அல்ல சகோதரர்கள்தான் வெட்டி கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu