பரமக்குடியில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் டூவீலரை திருடிய இரு இளைஞர்கள் கைது

பரமக்குடியில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் டூவீலரை திருடிய இரு இளைஞர்கள் கைது
X

பரமக்குடியில் திருடன் டூவீலரை திருடிச் செல்லும் சிசிடிவி கேமிரா பதிவு.

பரமக்குடியில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு டூவீலர் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சிசிடிவி காட்சிகளை வைத்து டூவீலர் திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்தவர் உமேஷ்குமார். இவர் தனது வீட்டு வாசலில் வழக்கம்போல் டூவீலரை நிறுத்தி வைத்துள்ளார்.

மறுநாள் காலை பார்க்கும்போது டூவீலர் திருடு போயுள்ளது. வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் நடந்துவந்து உமேஷ்குமாரின் டூவீலரை உருட்டிக் கொண்டு செல்கின்றனர்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் உமேஷ் குமார் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த தினேஷ் குமார் ஜெயக்குமார் என தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர்கள் டூவீலரை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!