இராமநாதபுரம் அருகே 50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

இராமநாதபுரம் அருகே 50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்
X

இராமநாதபுரம் அருகே 50 லட்சம் மதிப்புள்ள புகையிலை  பொருள்களை  பஜார் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம் அருகே 50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பஜார் போலீஸார் பறிமுதல் செய்தனர்

இராமநாதபுரம் அருகே 50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்து பஜார் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சந்தைவழியான் கோவில் செல்லும் ரோட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி வேன் மற்றும் கார் நின்றுள்ளது. அவ்வழியாக சென்ற திருவாடானை தாசில்தார் முருகவேல் இரண்டு வாகனங்கள் நிற்பது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். டிஎஸ்பி ராஜா, பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சிவஞானபாண்டியன், முத்துராமன் மற்றும் போலீஸ் படையினர் வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு சென்ற போது போலீசார் வருவதை அறிந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலிருந்து மூட்டைகளை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மாற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. வண்டிகளை ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. பச்சை, மஞ்சள், வெள்ளை கலரில் 47 மூட்டைகளில் கணேஷ் புகையிலை, விமல் பாக்கு, கூல்லிப், உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1300கிலோ எடையுள்ள பல வகையான புகையிலை பாக்கெட்டுகள் மதிப்பு சுமார் ரூ.50லட்சம் இருக்கலாம் என தெரிவித்தனர்.

Tags

Next Story