பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் வழங்க நடவடிக்கை

பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் வழங்க நடவடிக்கை
X

மாவட்டஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்

பண்டிகை காலத்தையொட்டி, நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எதிர்வரும் 04.11.2021 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில், காலை 08.00 மணிமுதல், இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். மேலும், பொருட்கள் வாங்காதவர்களுக்கு வழக்கம் போல, பண்டிகைக் காலம் முடிந்து 08.11.2021 திங்கட்கிழமை முதல், வழக்கம்போல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!