இராமநாதபுரம்: போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

இராமநாதபுரம்: போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி
X

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். 

போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தல் - 6667 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி.

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் 6667 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் போகலூர் 7 வது வார்டு உறுப்பினருக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்றது.

திமுக சார்பில் கதிரவன், அதிமுக சார்பில் மாரி உட்பட 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கதிரவன் 18198 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மாறி 11531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காமராஜ் 1460 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பிரசாத் 161 வாக்குகளும் பெற்றனர்.

திமுக வேட்பாளர் கதிரவன் 6667 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திர பிரசாத் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!