டிஎஸ்பியை கண்டித்து மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

டிஎஸ்பியை கண்டித்து மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
X
அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய டிஎஸ்பியை கண்டித்து மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய டிஎஸ்பி வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கோவிட் கேர் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய அரசு மருத்துவர்கள் பணியில் இருந்துள்ளனர். தங்களுடைய சொந்த வேலையாக மையத்தில் இருந்து வெளியே சென்றிருந்தபோது, ரோந்து பணியில் இருந்த டிஎஸ்பி வேல்முருகன் இரு மருத்துவர்களையும் தரக்குறைவாக, ஒருமையில் பேசி போலீஸ் வாகனத்தில் ஏற்றி 3 மணி நேரம் தொந்தரவு செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அரசு மருத்துவர்கள் ரத்த அழுத்தம் அதிகமாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

பணியில் இருந்த அரசு மருத்துவர்களை தரக்குறைவாக, ஒருமையில் பேசிய டிஎஸ்பி வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய டிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!