நாக்கை அறுத்த பெண்ணிற்கு ஆறுதல் கூறிய திமுக எம்எல்ஏ

நாக்கை அறுத்த பெண்ணிற்கு ஆறுதல் கூறிய திமுக எம்எல்ஏ
X

நாக்கை அறுத்துக்கொண்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மு.க ஸ்டாலின் வெற்றி பெற நாக்கை அறுத்த பெண்ணிற்கு திமுக எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா. இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார். பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை பிளேடால் அறுத்து உண்டியலில் போட முயற்சி செய்துள்ளார்.

ஆனால் கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசன் வனிதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். வனிதாவின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture