வெள்ளையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வெள்ளையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
X

வெள்ளையாபுரம் கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

கமுதி அருகேயுள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. காலை கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி, லட்சுமி ஹோமம் நடைபெற்று பின்னர் இன்று காலை வரை 4 கால யாகபூஜை நடைபெற்று,மஹா கும்பாபிஷேக விழா 10 மணியளவில் நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்ட பின்னர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனைகள் காட்டபட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்