இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்

இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இராமநாதபுரம் அருகே உள்ள புல்லங்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் சண்முகம்(50). இவர் அந்த ஊர் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், சூளையில் வேலை பார்த்த கனகா(45) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கனகா செங்கல் சூளைக்கு வேலைக்கு வருபவர்களிடம் பழகி வந்தாராம். இதனை கண்ட சண்முகம் மற்றும் மகன் பிரவீன்குமார்(29) ஆகியோர் கனகாவை கண்டித்துள்ளனர்.

இதன்பின்னரும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் செங்கல்சூளை அருகில் உள்ள கொட்டகையில் வைத்து தகராறு ஏற்பட்டதில், மனைவியை உருட்டுக்கட்டையால் சண்முகம் தாக்கினாராம். இதில் படுகாயமடைந்த கனகாவை, சண்முகம் தனது மகன் பிரவீன்குமார்(29) மற்றும் ஆம்னி வேன் டிரைவரான அதேபகுதியை சேர்ந்த கணேசன் மகன் முருகன்(28) ஆகியோரை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். கீழே விழுந்துவிட்டதாக கூறி கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், நாட்டுவைத்திய முறைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி, மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டனர். அங்கிருந்து செங்கல்சூளைக்கு திரும்பி வந்த நிலையில், கனகா தனது செயலை நிறுத்திக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், வேறு வழியின்றி செங்கல் சூளை கொட்டகையில் வைத்து கனகாவை, அவரின் தாலி கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

இதுதொடர்பாக இராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து, சண்முகம், அவரின் மகன் பிரவீன்குமார், வேன்டிரைவர் முருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா, மனைவியை கொலை செய்த சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மகன் பிரவீன்குமார், வேன் டிரைவர் முருகன் ஆகியோருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ. ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா