முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை.

முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை.
X
முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இளஞ்செம்பூரை சேர்ந்த ராதிகா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு இருந்த நிலையில், மனைவி மீது சந்தேகம் அடைந்த மாடசாமி இன்று தனது மனைவி ராதிகா தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்து வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் போலீசார் மனைவியை கொலை செய்த கணவர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!