ஏப்.4 ம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

ஏப்.4 ம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
X

பைல் படம்

வருகின்ற 4. 4.2023 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும்

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 04.04.2023 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானம் அருந்தும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 04.04.2023 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் , உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்கள் 04.04.2023 செவ்வாய்கிழமை அன்று முழுவதுமாக மூடப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில்... ஏப்.4.ம் தேதி அனைத்து மதுபான கடைகள், பார்கள், ஹோட்டலில் மது விற்பனை கிடையாது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.இதேபோல், விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், மகாவீர் ஜெயந்தியன்று மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

Tags

Next Story