திருப்புல்லாணி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்கு வரவேற்பு

திருப்புல்லாணி ஒன்றியத்தில்  இல்லம் தேடி கல்வித்திட்டத்துக்கு வரவேற்பு
X
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்தின் இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகவேல் மற்றும் முரளி தலைமையில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட சக்திபுரம், வள்ளிமாடன் வலசை, பருத்திக்காட்டு வலசை, வெங்குளம், லாந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் உரிய வயதில் உரிய கற்பித்தல் என்ற முழக்கத்துடன் மாணவர்களின் இல்லம் தேடிச்சென்று மாலை நேர வகுப்பில் தன்னார்வலர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக தன்னார்வலர்களும், மாணவர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கற்பித்தல் முறை நடைபெற்று வருகிறது. மேலும் இல்லம் தேடி கல்வித்திட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் முழுவதும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருவதால் தமிழக அரசு தொடங்கிய இல்லம் தேடி கல்வித் திட்டம் அப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்