அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள தடை

அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள தடை
X
அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள தடை. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவு.

அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள தடை. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவு: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கட்டாலங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை அழகுமுத்துக்கோன் 311-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. தற்பொழுது கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் கூட்டமாக கூட தடையிருப்பதால், பொதுமக்கள் மரியாதை செலுத்த வரவேண்டாம்.

பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்துவது, ஊர்வலங்கள், இருசக்கர வாகனங்களில் பேரணியாக செல்வது முற்றிலும் அனுமதியில்லை. அரசு சார்பில் மட்டுமே மரியாதை செலுத்தப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் யாரும் இதில்கலந்து கொள்ள வரவேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எனவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் செல்ல வேண்டாம் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future