மேலவலசை கிராமத்தில் எருதுகட்டு பெருவிழா
ஸ்ரீபொன்னு சிறையெடுத்த அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னு சிறையெடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா இன்று அய்யனார் கோவில் முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக கொடிக்குளம், பால்கரை, பாரனூர், தாயமங்கலம், ஆப்பனூர், சீனாங்குடி, பொட்டகவயல், தூவல் போன்ற பகுதியில் இருந்து, 46 காளை மாடுகள்,பங்கு பெற்றன. மேலவலசை கிராமத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, எங்கள் கிராமத்தில் சுமார் 261 ஆம் ஆண்டாக எருதுகட்டு திருவிழாவினை சீரும் சிறப்போடும் நடத்தி வருகிறோம் என்றார்.
மேலும், பல தலைமுறைகளாக, இராமநாதபுரம் மாவட்டதில் சிறந்த எருதுகட்டு பெருவிழாவாக இது திகழ்ந்து வருகிறது. இதன் சிறப்பை, சுற்றுவட்டார கிராமங்கள் அறிந்த ஒன்று என்றார். கிராம துணைத்தலைவர் செல்வக்குமார், பொருளாளர் மக்கள சாமி, செயலாளர் லட்சுமணன், எழுத்தாளர் கதிரேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu