இராமநாதபுரம் மாவட்டத்தில் 314 கிராமங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி

இராமநாதபுரம் மாவட்டத்தில் 314 கிராமங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி
X

மாதிரி படம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 314 கிராமங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி இலக்கை எட்டி சாதனை

இராமநாதபுரம் மாவட்டத்தில் 314 இடங்களில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 2020 மார்ச் 25 முதல் அரசின் கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் பிடியில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்தது.

இதன்படி ஜன.16 ஆம் தேதி முதல் தடுப்பூசி பணி தொடங்கியது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, மே 2021-ஜூலை 2021 மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியை முனைப்புடன் செயல்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி தினமும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செப்.12, 19, 26, அக்.3 தேதிகளில் நடந்த மாநில அளவிலான சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 429 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள் நடந்த முகாம்களில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்டிய கிராமங்களின் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, திருப்புல்லாணி ஒன்றியத்தில் 242 கிராமங்களில் 32, ஆர்எஸ் மங்கலத்தில் 276ல் 20, திருவாடானையில் 314ல் 5, பரமக்குடியில் 181 ல் 28, போகலூரில் 88 ல் 17, நயினார் கோவிலில் 105 ல் 54, முதுகுளத்தூரில் 195ல் 38, கமுதியில் 251ல் 57, கடலாடி ஒன்றியத்தில் 272ல் 7 என 2 ஆயிரத்து 306 கிராமங்களில் 258 கிராமங்கள் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளன.

இராமேஸ்வரம் நகராட்சி 109 தெருக்களில் 1, பரமக்குடி நகராட்சியில் 146 ல் 25 தெருக்கள் என 26 தெருக்கள் 100 சதவீதம் இலக்கை எட்டியுள்ளன. பேரூராட்சிகளில் ஆர் எஸ் மங்கலத்தில் 88 தெருக்களில் 24, மண்டபம் பேரூராட்சியில் 73 ல் 1, கமுதியில் 103ல் 3, சாயல்குடி பேரூராட்சியில் 67 ல் 2 என 30 தெருக்கள் 100 சதவீதம் இலக்கை எட்டியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!