புதுக்கோட்டையில் பொது மக்களின் குறையை தீர்த்து வைக்க புதிய வாட்ஸ் அப் செயலி

புதுக்கோட்டையில் பொது மக்களின் குறையை தீர்த்து வைக்க புதிய வாட்ஸ் அப் செயலி
X

புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பொது மக்களின் குறையை 71 மணி நேரத்தில் தீர்த்து வைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் புதிய வாட்ஸ் அப் செயலி அறிமுகம்

புதுக்கோட்டை தொகுதி மக்கள் தங்களுடைய குறைகளை இதில் பதிவு செய்தால் 71 மணி நேரத்திற்குள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அறிவித்துள்ளார்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஒரு புது முயற்சியை எடுத்துள்ளார். அதாவது வாட்ஸ் அப் செயலி ஒன்றை முத்துராஜா புதிதாக உருவாக்கி உள்ளார் அந்த வாட்ஸப் நம்பர்

8606717171 என்ற இந்த வாட்ஸ்அப் நம்பரில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் பிரச்சனைகளை அதில் பதிவிட்டால் பதிவிட்ட 71 மணி நேரத்திற்குள் அந்த குறைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு 71 மணி நேரத்திற்குள் குறைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எம்எல்ஏ எடுத்துள்ளார் அதற்காக குழு ஒன்றும் எம்.எல்.ஏ உருவாக்கியுள்ளார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ முத்துராஜா தமிழக முதல்வர் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த முயற்சியை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நான் எடுத்துள்ளேன் தொகுதி மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை whatsapp செயலியில் பதிவு செய்தால் 71 மணி நேரத்திற்குள் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பதிவிட்ட குறைகள் மற்றும் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அந்த குழு உடனடியாக எடுத்துச் சென்று உடனடியாக குறைகளுக்கு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் பட்டாமாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்றவாறு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும் எம்எல்ஏ முத்துராஜா கூறினார்.

இந்த புது முயற்சி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொது மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவும் குறிப்பாக இதில் குடிநீர் பிரச்சனை கழிவுநீர் பிரச்சினை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!