குற்றச்செயல்கள் தொடர்பான புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்: மாவட்ட எஸ்பி அறிமுகம்

Pudukkottai SP Office
Pudukkottai SP Office-புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்பி. நிஷாபார்த்திபன் மத்திய அரசுப்பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக 9489946674 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணில் பொதுமக்கள் வாய்ஸ் மெஸ்சேஜ், புகைப்படம், எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் கஞ்சா மற்றும் ஆன்-லைன் லாட்டரி விற்பனையைக் கட்டுப்படுத்த தீவிர கவனம் செலுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்கு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் குற்றச்செயல்களை தடுக்கவும் பத்திரிகை மற்றும் ஊடவியலாளர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் எஸ்.பி. வந்திதா பாண்டே தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu