புதுக்கோட்டையில் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு அப்பாவைக் கொன்ற மகன் உள்ள 2 பேர் கைது

புதுக்கோட்டையில் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு அப்பாவைக் கொன்ற மகன் உள்ள 2 பேர் கைது
X

பெற்ற மகனால் கொலை செய்யப்பட்ட அரசு பணியாளர் கருப்பையா 

அரசு வேலையை வாங்குவதற்காக பெற்ற தந்தையை கொலை செய்த மகனின் விபரீதச் செயல் மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு அப்பாவைக் கொன்ற மகன் புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்த கருப்பையா. கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக அரசுப் பணியில் உள்ள நிலையில் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அதே பேரூராட்சி அலுவலகம் அருகே மது போதையில் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய கீரனூர் போலீஸார் அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வந்தனர். அவரது உடற்கூராய்வில் அவர் விஷம் குடித்திருந்ததும், தாக்கப்பட்டதால் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில், கருப்பையா பேரூராட்சி துப்புரவு பணியில் இருந்து ஓய்வுபெற இருந்த்தும் அவரது வேலையை பெற வேண்டும் என்ற நோக்கில் அவரது மகன் பழனி மற்றும் அவரது நண்பர் கீரனூர் அருகே உள்ள ஈச்சங்காட்டை சேர்ந்த ஆனந்தன் ஆகியயோர் இருவரும் சேர்ந்து கருப்பையாவுக்கு மதுவில் குருணை மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அதை குடித்த கருப்பையா உயிருக்கு போராடியபோது, அவரது நெஞ்சில் மிதித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து போலீஸார் கருப்பையாவின் மகனான பழனி மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். அரசு வேலையை வாங்குவதற்காக பெற்ற தந்தையை கொலை செய்த மகனின் விபரீதச் செயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!