கொலைக்குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
கீரனூர் அருகே36 வயது பெண்ணை சேலையால் கழுத்தை நெறித்து கொலைசெய்த குற்றவாளிக்குஆயுள் தண்டனை மற்றும் அபராதம்
புதுக்கோட்டைமாவட்டம், கீரனூர்காவல் சரகத்தில்; கடந்த -05.12.2019ம் தேதி கீரனூர்ஏழில் நகரைச்; சேர்ந்த பெருமாள்மகன் குமார்(35) என்பவருக்கும் அதேஊரைச் சேர்ந்த கணவரைபிரிந்து வாழும் புவனேஸ்வரி(36) என்பவருக்கும்; பழக்கம்ஏற்பட்டு வாழ்ந்துவந்த நிலையில் குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு புவனேஸ்வரியை தாக்கி அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக புவனேஸ்வரியின் மகள்கொடுத்தபுகாரின் பேரில் கீரனூர் போலீஸார் குமாரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டமுதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது, வழக்கின் இறுதி விசாரணை 16.06.2022-ம் தேதி நடந்து முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும், மேற்படிஅபராதத்தை கட்டதவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் மேலும் ஒரு பிரிவில் 7ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறையில் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் 20 சதவீதம் இறந்தவரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கினார். .இவ்வழக்கில் அரசுதரப்புவழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார் .
மேலும் இவ்வழக்கினைசிறப்பாக புலன்விசாரணை செய்த காவல் ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் நீதிமன்றபணிக்கான காவலர் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் புதுக்கோட்டைமாவட்டகாவல் கண்காணிப்பாளர்; நிஷா பார்த்திபன் பாராட்டினார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளி குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu