பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன், தாய் கைது: தந்தை தலைமறைவு

பைல் படம்
புதுக்கோட்டை அருகே 17 வயது இளம் பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொண்டதோடு அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவ சிதம்பரம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் சந்திரா ஆகியோர் போக்சோ மட்டும் குழந்தைகள் திருமண சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சிவ சிதம்பரம் என்ற இளைஞர் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதோடு அவரை அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண்ணின் பெற்றோர் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சி சிவ சிதம்பரம் 17 வயது இளம் பெண்ணை நேற்று விராலிமலையில் காரில் வந்து இறக்கி விட்டு சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண சட்டம் ஆகியவற்றின் கீழ், சிவ சிதம்பரம் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மேலக்கண்ணு மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து சிவ சிதம்பரம் மற்றும் அவரது தாயார் சந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தந்தை மேலகண்ணுவை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu