கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை நேரடியாக ஆய்வு செய்த கல்வி துறை அதிகாரிகள்

கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை  நேரடியாக ஆய்வு செய்த   கல்வி துறை அதிகாரிகள்
X

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று கல்வி கற்பதை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பதை ஆய்வு செய்த அதிகாரிகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்கிறார்களா? என்பது குறித்து நேரில் அறிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மாவட்டக்கல்வி அலுவலர்களின் அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலோடு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களின் கண்காணிப்பின்கீழ் கல்வித் தொலைக்காட்சியில் தங்களது வகுப்பு பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாடம் கற்பிற்கப்படுவதை பார்த்து மாணவர்களுக்கு ஏற்படும் பாட சந்தேகங்களை வகுப்பு ஆசிரியர்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

மாணவ, மாணவிகள் கல்வி தொலைக்காட்சியை முறையாக பார்க்கிறார்கள? என்பது குறித்து இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித்தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கற்றல் மேற்கொள்வதை மாணவர்களின் குடியிருப்புக்கே சென்று இன்று மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன் நேரடியாக சென்று ஆய்வு செய்து மாணவர்களை உற்சாகமூட்டி ஊக்கப்படுத்தினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil