மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு, பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.

மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்,மாத்தூரில் கடந்த நிதி ஆண்டில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கும் இந்த நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில்,ஊரக வளர்ச்சித் துறை பரிந்துரை செய்து, ஊராட்சி நிர்வாகம் அதனை ஏற்று மாத்தூர் பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!