புதிய பகுதிநேர அங்காடியினை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

புதிய பகுதிநேர அங்காடியினை  திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி
X

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், என்.கீழப்பட்டியில் கூட்டுறவுத் துறை சார்பில், புதிய பகுதி நேர அங்காடியினை,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

விராலிமலை அருகே என்.கீழப்பட்டியில் புதிய பகுதி நேர அங்காடியினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், புதிய பகுதிநேர அங்காடியினைசட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், என்.கீழப்பட்டியில் கூட்டுறவுத் துறையின் சார்பில், புதிய பகுதி நேர அங்காடியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் கூட்டுறவுத் துறையின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்படி என்.கீழப்பட்டியில் புதிய பகுதிநேர அங்காடி திறந்து வைக்கப்பட்டது.

எட்டுக்கால்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள தொண்டைமான்நல்லூர் அங்காடி யிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள என்.கீழப்பட்டி பகுதிநேர நியாய விலைக் கடையானது 181 குடும்ப அட்டைகளுடன் பிரதி வாரம் சனிக்கிழமை இயங்கும் வகையில் என்.கீழப்பட்டி கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் இக்கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பதினால் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரமும், அலைச்சலும் குறையும்.

தாய் அங்காடியான தொண்டைமான்நல்லூர் அங்காடியிலிருந்து என்.கீழப்பட்டி சுமார் 2 கி.மீ தூரம் உள்ளதாலும், மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் இனி என்.கீழப்பட்டி கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தங்கள் கிராமத்திலேயே பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் இதனை உரிய முறையில் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, துணைப் பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) ராஜவேலு, சார்பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) கார்த்திக் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், கூட்டுறவு ஒன்றிய மேலாளர் பிரபாகரன், வட்டாட்சியர் காமராஜ், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் ரவிச்சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil