மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், 2,225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (19.12.2023) வழங்கினார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கரைகொண்டு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்திற்குள் சென்றுவரும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்படி இன்றையதினம் 2,225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
அதன்படி அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், வயலோகம், பரம்பூர், முக்கணாமலைப்பட்டி பள்ளிகளைச் சேர்ந்த 232 மாணவர்களுக்கும், 247 மாணவிகளுக்கும், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அன்னவாசல், இலுப்பூர், கீழக்குறிச்சி, மண்ணவேளாம்பட்டி, இராப்பூசல், மருதாந்தலை பள்ளிகளைச் சேர்ந்த 339 மாணவர்களுக்கும், 549 மாணவிகளுக்கும்,
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், காரையூர், மேலத்தானியம், சடையம்பட்டி, நகரப்பட்டி பள்ளிகளைச் சேர்ந்த 172 மாணவர்களுக்கும், 179 மாணவிகளுக்கும், பொன்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொன்.புதுப்பட்டி, பொன்னமராவதி, ஆலவயல் பள்ளிகளைச் சேர்ந்த 132 மாணவர்களுக்கும், 254 மாணவி களுக்கும், மேலைசிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலைசிவபுரி பள்ளியினைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கும், 57 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 2,225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
மேலும் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த மிதிவண்டிகளை மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகள் மிதிவண்டியினை நாள்தோறும் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைகிறது என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
பின்னர், பொன்னமராவதி வட்டாரம், காரையூரில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.39.55 இலட்சம் மதிப்பீட்டில், விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுப்பொருட்கள் இருப்பு வைத்து வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், இணை இயக்குநர் (வேளாண்மை)பெரியசாமி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை)செல்வம், சடையப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து, பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu