மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 24.01.2023 அன்று முதல் 21.02.2023 அன்று வரை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய, வட்டார அளவிலான 18 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்டது. இம்முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கி உள்ளனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 24.01.2023 அன்று முதல் 21.02.2023 அன்று வரை நடைபெற்றது. இம்முகாம் களில், புதிதாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோர், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, பராமரிப்பு உதவி தொகை, வருவாய்த்துறையின் மூலம் மாதாந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பநிலை மறுவாழ்வு பயிற்சி, முட நீக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை, வங்கிக்கடன் உதவி, பிற மறுவாழ்வு உதவிகள் உள்ளிட்டவைகள் வழங்க தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் அறிவு சார் குறைபாடு உடையவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) சுவாமி முத்தழகு, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், விராலிமலை சந்திரசேகரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!