புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 2,704 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில்  2,704 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
X

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர்

பேருந்து வசதி, மதிய உணவு, காலை சிற்றுண்டி, விலையில்லா மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 2,704 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று 2,704 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

விராலிமலை ஒன்றியம், கொடும்பா@ர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 170 மாணவர்களுக்கும், 169 மாணவிகளுக்கும், விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 233 மாணவிகளுக்கும், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 455 மாணவர்களுக்கும், 270 மாணவிகளுக்கும் மற்றும் அன்னவாசல் ஒன்றியம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 697 மாணவர்களுக்கும், 710 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 2,704 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகள் அனைவரும் சிறந்த கல்வியினை பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சிறந்த உயர் கல்வியினை பெற வேண்டும் என்ற அடிப்படையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் பயின்று வருகின்றனர்.

எதிர்கால இந்தியா உங்களை போன்ற மாணவ, மாணவிகளின் கைகளில் உள்ளதை முன்னிட்டு, மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பேருந்து வசதி, மதிய உணவு, காலை சிற்றுண்டி, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து சிறந்த கல்வி பெற்று, இதன் மூலம் வாழ்க்கையின் உயர்நிலையினை அடைய சிறந்த தருணமான இந்த மாணவ பருவத்தினை முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் சிறந்த மனிதராக உயர வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: கொரோனா பேரிடர் காலங்களில் மாணவ, மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் 'நான் முதல்வன்" திட்டத்தினை தொடங்கி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுiமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறார். மேலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பள்ளிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுப்புறச் சூழலை பெருக்கச் செய்யும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தாங்கள் பெற்றுள்ள விலையில்லா மிதிவண்டிகள் மூலம் உரிய முறையில் கவனமாக பள்ளிக்கு சென்று வருவதன் மூலம் உடல் நலம் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்வதுடன், தங்களது கல்வி யிலும் சிறந்த கவனம் செலுத்தி இதுபோன்ற மேடைகளில் அமரும் வகையில் உயர்ந்த மனிதராக வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இந்நிகழ்ச்சிகளில், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு மணி, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் லதா இளங்குமரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மு.பி.ம.சத்தியசீலன், எம்.ஆர்.அன்பழகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு