கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 664 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 664 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 664 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 664 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (08.11.2022) வழங்கினார்.
குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியினைச் சேர்ந்த 155 மாணவர்களுக்கும், கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியினைச் சேர்ந்த 328 மாணவிகளுக்கும், ஒடுகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியினைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கும், 82 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 664 மாணவ, மாணவிகளுக்கு ரூ.33,61,170 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இன்றையதினம் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதற்காக மற்ற துறைகளை காட்டிலும் அதிகப்படியான நிதியினை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்து பல்வேறு முன்னோடித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகளின் மேல் அதிக நம்பிக்கைக் கொண்டும், நாட்டையும், வீட்டையும் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு இத்திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
நல்ல பழக்கத்திற்கு நம்மிடையே நேரம் தவறாமை மிக முக்கியமானதாகும். மாணவ பருவத்திலேயே நேரம் தவறாமையை ஊக்குவிக்கும் வகையில், மிதிவண்டிகளை வழங்ககப்படுகிறது.மாணவ, மாணவிகள் விலையில்லா மிதிவண்டியை பயன்படுத்துவதன் மூலம் பயணநேரம் சிக்கனமாவதுடன், கூடுதலாக படிப்பதற்கும் நேரம் கிடைக்கிறது. இதன்மூலம் இக்கூடுதல் நேரத்தில் நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று மதிப்புமிக்க மாணவர்களாக உருவாக வேண்டும்.
பெண்கள் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுiமைப் பெண் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசுப் பள்ளிகளில் பயின்று மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
எனவே இத்திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களது எதிர்காலத்தினை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் கே.ஆர்.என்.போஸ், கீரனூர் பேரூராட்சித் தலைவர் ஜெயமீரா ரவிக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உய்யப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu