உலக தாய்ப்பால் வார விழா: பொன்னமராவதியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்

உலக தாய்ப்பால் வார விழா: பொன்னமராவதியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்
X

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை பொன்னமராவதி அரிமா சங்க மண்டல தலைவர் அரிமா விஜயரெங்கன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

உலக தாய்ப்பால் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி துவக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உலக தாய்ப்பால் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியை அரிமா சங்க மண்டல தலைவர் அரிமா விஜயரெங்கன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரிமா மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி, சோலையப்பன், வட்டார தலைவர் செல்வம், பொன்னமராவதி லயன்ஸ் சங்கத்தலைவர் பாஸ்கர், பொன்னமராவதி சைன் லயன்ஸ் சங்கத் தலைவர் மனமுகந்தராஜா, பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்க செயலாளர் நாசர் , செயலாளர் தர்மராஜ், சுப்பையா, சாந்தி, சமூக ஆர்வலர்கள் கோவிந்தராஜ், ஜீவானந்தம், செல்வம், தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வேர்ல்டு விஷன் இந்தியாவைக் குறித்து அறிமுக உரை சலோமி உரையாற்றினார்கள். வேர்ல்டு விஷன் இந்தியா ஒருங்கிணைப்பாளர் பிரதாப் வரவேற்புரையாற்றினார். வேர்ல்டு விஷன் பணியாளர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முடிவில் விடியல் கலைக்குழுவின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare