பொன்னமராவதி அருகே காரையூர் அரசு சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

பொன்னமராவதி அருகே காரையூர் அரசு சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
X

பொன்னமராவதி அருகே காரையூர் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் நன்மைகள் அதைத் தவிர்த்தால் ஏற்படும் குறைபாடுகள் பற்றி கவிதை, நாடகம் மூலம் விளக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தலின்படி, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி ஆலோசனையின்படி காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அருள்மணி நாகராஜன் முன்னிலையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

இதில், தாய்ப்பால் நன்மைகள் குறித்தும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டவில்லை எனில் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும் கவிதை மற்றும் நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இதில் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொது மக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிய வேண்டும் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், காரையூர் சுற்று வட்டார கர்ப்பிணிகள்,பெண்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், சமுதாய சுகாதாரதுறை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், மருந்தாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ப பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!