திருமயம் தொகுதியில் ரூ.53 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்

திருமயம் தொகுதியில் ரூ.53  லட்சத்தில் முடிவுற்ற பணிகள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்
X

 கீழத்துவாசபுரத்தில் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.43 லட்சம் மதிப்பீட்டில் 40 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலையை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

திருமயம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.52.99 இலட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்றப் பணிகள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் ரூ.52.99 இலட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்றப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.52.99 இலட்சம் மதிப்பி லான பல்வேறு முடிவுற்றப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (15.12.2023) திறந்து வைத்தார்.

பின்னர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்டுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பொதுமக்களின் வசதிக்காக சாலை வசதி, மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.52.99 இலட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்றப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது.

திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில் 6 கேவிஏ/11 கேவி மின்மாற்றி ரூ.7.17 இலட்சம் மதிப்பீட்டிலும், கண்ணனூர் ஊராட்சியில் 6 கேவிஏ/11 கேவி மின்மாற்றி ரூ.6.75 இலட்சம் மதிப்பீட்டிலும், மேலத்துருவாசபுரம் அம்பலக்காரர் வீதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.4.86 லட்சம் மதிப்பீட்டில் 80 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை பணியினையும், கீழத்துவாசபுரத்தில் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2.43 லட்சம் மதிப்பீட்டில் 40 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை பணியினையும்,

வி.லெட்சுமிபுரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கற்பக விநாயகா அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைப் பணியி னையும், வி.லெட்சுமிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும் திறந்து வைத்து, வி.லெட்சுமிபுரம் ஊராட்சி, சிவன் கோவில் வளாகத்தில் 250 மரக்கன்றுகள் நடும் பணியினையும் தொடக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, மேமணப்பட்டியில் 6 கே வி ஏ /11 கேவி. மின் மாற்றி ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டிலும், நெறிஞ்சிக்குடி ஊராட்சி, பாலப்பட்டியில் 6 கேவி ஏ/11 கேவி மின்மாற்றி ரூ.6.48 இலட்சம் மதிப்பீட்டிலும் புதிய மின்மாற்றிகள் திறந்து வைக்கப்பட்டது.

திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் முன்னேறிய பகுதிகளாக மாற்றம் செய்திடும் வகையில் இப்பகுதிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், மின்சார வாரிய செயற்பொறியாளர் எம்.ஆனந்தாய், உதவி செயற்பொறியாளர் கா.ராமனாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், நளினி, உதவி மின் பொறியாளர் சாத்தையா, வட்டாட்சியர் புவியரசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராமநாதன் (எ) ராமசாமி (வி.லெட்சுமிபுரம்), சண்முகசுந்தரம் (கண்ணனூர்), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!