மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவுசெய்யும் முகாம்: அமைச்சர் ரகுபதி ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு பணியை ஆய்வு செய்த சட்ட அமைச்சர் ரகுபதி. உடன் ஆட்சியர் மெர்சி ரம்யா
புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், விண்ணப்பங் களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (27.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 27.03.2023 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்கவுள்ள, மாதம் ரூ.1,000 வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” ஏறத்தாழ ஒருகோடி குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதனடிப்படையில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் முதல்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்று வருகிறது.
பொன்னமராவதியில், காரையூர் சமுதாயக்கூடம், கீழத்தானியம் இ-சேவை மையம், மேலத்தானியம் சமுதாயக்கூடம், சடையம்பட்டி அய்யனார்கோவில் மண்டபம், ஆலவயல் கிராம சேவை மையக் கட்டடம், பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னம ராவதி மீனாட்சி திருமண மண்டபம்,
வலையப்பட்டி நகர விடுதி, செவலூர் இ-சேவை மையம், ஒலியமங்கலம் கிராம சேவை மையம், திருக்களம்பூர் ஊராட்சி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், விண்ணப்பங் களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முகாம்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் வருகை புரிந்து, விண்ணப்பங் களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu