திருமயம் பெருமாள் கோயில் டிச 23 -ல் சொர்க்க வாசல் திறப்பு
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள்(பைல் படம்)
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதுண்டு. ஆனால் திருமயம் கோயிலில் அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல் இந்த ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவை ஒட்டி முன்னதாக டிச. 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் ஆழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 7 மணி அளவில் மோகினி அவதாரம் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் 23ஆம் தேதி அதிகாலை திருப்பள்ளியில் எழுச்சியும் சேவை காலமும் நடைபெறுகிறது.3.30 மணி அளவில் ஆனந்த சயன அலங்காரம் நடைபெற உள்ளது காலை 4 மணி அளவில் விஸ்வரூப தரிசனமும் 4.30 மணி அளவில் ராஜ அலங்கார சேவையும் நடைபெற உள்ளது. பின்னர் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாளை பக்தர்கள் பல்லாக்கி தூக்கி வந்து நிறுத்தி ஆழ்வார் எதிரே மோட்சம் கொடுக்க பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்ப மேள தாளங்கள் முழங்க 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட உள்ளது.
சொர்க்கவாசல் வழியாக நுழைந்து சத்தியமூர்த்தி பெருமாள் புஷ்ப ஊரணி வழியாக ஊர்வலமாக வந்து வசந்த மண்ட பத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை தரிசிக்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் பொதுமக்கள் செய்து வருகின்றனர் சுகாதார வசதிகளை ஊராட்சி மன்ற மூலம் செய்யப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu