திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் 17 ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருமயம் அரசு கலை  அறிவியல் கல்லூரியில் வரும் 17 ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
X

filepicture

முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 17.08.2022 புதன்கிழமை நடத்தப்படுகிறது

திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை17.08.2022 முதல் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 17.08.2022 புதன்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில் பி.எஸ்சி கணிதம் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கும், நண்பகல் 12 மணியளவில் வணிகவியல் பாடப்பிரிவிற்கும் நடைபெற உள்ளது.

மேலும் 18.08.2022 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல், தேதி மற்றும் கட்டண விவரங்கள் கல்லூரி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

17.08.2022 புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் பி.எஸ்சி கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கு கட்டணம் ரூ.2945- ம், 17.08.2022 புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் பி.காம் வணிகவியல் பாடப்பிரிவிற்கு கட்டணம் ரூ.2965- ம் மற்றும் 18.08.2022 வியாழக்கிமை முற்பகல் 10 மணியளவில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு கட்டணம் ரூ.2365- ம் ஆகும்.

கொண்டுவரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரங்கள், 10வகுப்பு, +1 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல் (அசல் மற்றும் நகல்கள் -4), +2 மாற்றுச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்கள் -2), நிரந்தர சாதிச் சான்றிதழ் அட்டை (அசல் மற்றும் நகல்கள் -2), இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பம் (நகல்கள் - 2), வருமானச் சான்றிதழ் (நகல்கள் - 2), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (4) , வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகும். கோவிட் – 19 பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் வே.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare products