புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.63.84 லட்சம் செலவில் முடிவுற்றப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.63.84 இலட்சம்; செலவில் முடிவுற்றப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (23.12.2022) துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் இன்றைய தினம் அரிமளம், திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.63.84 இலட்சம் செலவில் முடிவுற்றப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில் குறைவான மின்அழுத்தத்தை சரிசெய்யும் வகையில் ரூ.12,47,320 செலவில் 100முஏயுஃ11முஏ திறனுடைய புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை துவக்கி வைத்ததன் மூலம் 250 வீடுகள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் இதர தொழிலகங்கள் பயன்பெறும். மேலும் தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ஆகியவற்றின்கீழ் தலா ரூ.5.25 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 பொதுசுகாதார வளாகங்கள்.
ரூ.26 இலட்சம் செலவில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றையும், திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் ரூ4,87,470 செலவில் 63முஏயுஃ11முஏ புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை துவக்கி வைத்ததன் மூலம் 150 வீடுகள், ஒரு விவசாய பம்புசெட், ஒரு உயர் கோபுரம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் இதர தொழிலகங்கள் பயன்பெறும்.
மேலும் குழிபிறையில் ரூ.7.68 இலட்சம் செலவில் 15வது நிதி குழு மானியத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும், பொன்னமராவதி ஒன்றியம், வேகுப்பட்டி ஊராட்சியில் ரூ.7,56,550 செலவில் 63-11கேவி திறனுடைய புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை துவக்கி வைத்ததன் மூலம் 150 வீடுகள்,5 வணிக மின்இணைப்பு, 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் இதர தொழிலகங்கள் பயன்பெறும் என ஆகமொத்தம் ரூ.63.84 இலட்சம் செலவில் 7 முடிவுற்றப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
எனவே இத்தகைய வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஷ் (அரிமளம்), தங்கராஜ் (பொன்னமராவதி), சங்கர் (திருமயம்), வட்டாட்சியர் பிரவினாமேரி (திருமயம்), பிரகாஷ் (பொன்னமராவதி), ஊராட்சிமன்றத் தலைவர்கள் பி.எல்.ராஜமாணிக்கம் (ஆயிங்குடி), அழகப்பன் (குழிபிறை), அர்ஜுனன் (வேகுப்பட்டி), செயற்பொறியாளர் எம்.ஆனந்தாய் (திருமயம்), உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.முத்துச்சாமி (பொன்னமராவதி), எஸ்.சிங்காரக்கண்ணன் (குழிபிறை), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu