பஸ்சில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டு

பஸ்சில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டு
X

அரசு பேருந்தில் தவறவிட்ட தங்க நகை பணம் ஆகியவைகளை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்.

பேருந்தில் தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி. இவர் நேற்று ஜூலை 29 கோயம்புத்தூரிலிருந்து பொன்னமராவதியை நோக்கி வந்த அரசு பேருந்தில் திண்டுக்கல்லில் ஏரி கொட்டாம்பட்டியில் இறங்கியுள்ளார்.

இவர் கையில் வைத்திருந்த பையில் ஒன்பதரை பவுன் தங்க சங்கிலி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, 2000 ரொக்கம், டிரைவிங் லைசன்ஸ், வங்கி ஏடிஎம் உள்ளிட்டவைகளை வைத்திருந்தார். பேருந்தை விட்டு இறங்கிய மகாலட்சுமி தன் கையிலிருந்த பையை தேடியுள்ளார்.

இதனையடுத்து, தான் சென்ற அரசுப் பேருந்தில் தான் பையை தவறவிட்டது தெரியவந்தது. உடனடியாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் உலகம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொன்னமராவதி வந்தடைந்த அரசு பேருந்தில் கிடந்த பையை ஓட்டுனர் தவச்செல்வம் மற்றும் நடத்துனர் மனோகரன் ஆகிய இருவரும் பேருந்தில் கிடைத்த பொருளை பஸ் டிப்போ பொறுப்பு மேலாளர் கருப்பையாவிடம் ஒப்படைத்துள்ளளர்.

கிளை பொறுப்பு மேலாளர் கருப்பையா உரிய விசாரணை செய்து பொருளை தவறவிட்ட சிவலிங்கபுரம் மகாலட்சுமி என்பவரை வரவழைத்து ரூ. 3.20 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி உள்ளிட்ட பொருளை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நேர்மையான செயலை செய்த தவச்செல்வன் மற்றும் மனோகரனை, பேருந்து கிளை மேலாளர், சக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Tags

Next Story