பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி போராட்டம்

பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி போராட்டம்
X

ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி தாலுகாவில் உள்ளது ஆர்.பாலக்குறிச்சி. இந்த ஊராட்சி அடிப்படைத் தேவைகளுக்காக சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டி உள்ளதால், அடிப்படை வசதிகள் முழுவதுமாக கிடைக்கப் பெறாமல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் பின் தங்கிய ஊராட்சியாக ஆர்.பாலக்குறிச்சி இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த வைரவன்பட்டி, ரெகுநாதபட்டி, வெடத்தலான்பட்டி உள்ளிட்ட 6 கிராம பொதுமக்கள் இன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒன்றிய சேர்மன் சுதா அடைக்கலமணியிடம் சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தங்கள் ஊராட்சியை நீக்கவும் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி மனு அளிக்க திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story
why is ai important to the future